Call us Now: (+91) 9894040381 Get a Free Quote

About us

About Us

திண்டுக்கல் சாரதியை உங்களுக்கு தெரியும். சாரதிக்கு முன்பே திண்டுக்கல்லுக்கு புகழ் தேடித்தந்தது பூட்டு. திண்டுக்கல் அந்தக்காலத்திலேயே தண்ணீர் பஞ்சத்துக்குப் பிரபலம். செக்குக்கு மாட்டைக் கொடுத்தாலும் கொடுக்கலாம், ஆனால் திண்டுக்கல்காரனுக்கு பொண்ணு கொடுக்கக் கூடாது என்று அந்தக் காலத்தில் கூறியவர்கள் உண்டு. விவசாயம் இல்லாததால் மாற்றுத் தொழிலாக உருவெடுத்தது தான் பூட்டு. நேரம் காலம் பார்க்காமல் உழைக்க துடித்த இந்த ஊர் மக்களுடன் இத்தொழில் இரண்டறக் கலந்து விட்டது. சாதாரணமான பூட்டில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது திண்டுக்கல்தான்.

திருப்பதி உள்ளிட்ட முக்கிய கோயில்கள் மட்டுமல்ல....மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து என்று பல நாடுகளுக்கும் திண்டுக்கல் பூட்டு ஆர்டரின் பேரில் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கைக்கு கள்ளத் தோணியில் கடத்தப்பட்டதும் உண்டு. உள்பாகங்கள் துத்த நாகத்தில் அமைக்கப்பட்டதால் உப்புக்காற்று மாறுபாடான பருவநிலை போன்றவற்றையும் எதிர் கொண்டு காலம் கடந்து நின்றது. திருடர்களைத் தாக்கும் பூட்டு, திருட முயல்பவர்களை குழப்பும் பூட்டு மணி இருந்து வியாபாரிகளின் வருகை, பூட்டப்பட்டறைகளில் இரவும், பகலும் ஃபைலிங் செய்யப்படும். ஓசை, தினமும் ஆயிரக்கணக்கில் வண்டிகளில் வெளியூர்களுக்கு பயணமாகும் பூட்டுகள்..... திண்டுக்கல் எப்போதும் பரபரப்பில் மூழ்கியிருந்தது

இதற்கு பெரும் ஆபத்து உத்திரபிரதேசத்தில் இருந்து வந்தது. இயந்திரமயமாதலுக்கு பலியான எத்தனையோ தொழிகளில் பூட்டும் பிரதானம். 75 ஆண்டுகளுக்கு முன் உத்திரப்பிரதேச மாநிலம் அலிகாரில் இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பூட்டுகள், இந்தியா முழுவதும் சாவிகளோடு படையெடுத்தன. ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பூட்டுகளைத் தயாரித்துத் தள்ளும் இயந்திர தொழில்நுட்பத்தால் விலை மிகவும் மலிவாக இருந்தது. இயந்திர வடிவமைப்பு என்பதால் பார்க்க அழகாகவும் இருந்தது. தொடக்கத்தில் டைகர் பூட்டு என்ற பெயரில் அறிமுகமானது. அமுக்கு பூட்டு என்று நடைமுறையை அழைக்கப்பட்டது. இந்த இயந்திரப்பூட்டு தாக்குதல் ஒரு புறம் தொடர.... இரும்புப் பொருட்களின் விலை உயர்வு, கூலி அதிகரிப்பு அதை பூட்டு விலையை எதிரொலிக்க வேண்டிய நிர்ப்பந்தம் என திண்டுக்கல் பூட்டு உற்பத்தியாளர்களாக ஆனார்கள்.

மெல்ல மெல்ல திண்டுக்கல்லை விழுங்கத் தொடங்கியது அந்த உத்திரப்பிரதேச இயந்திரம். தலைமுறை தலைமுறையாக வியர்வை வழிய உழைத்த உழைப்பு, பூட்டின் சரித்திரத்தில் ஏற்படுத்திய அதிரடிப் புரட்சி.... எல்லாம் மலரும் நினைவுகளாகவே மாறிப்போனது. பூட்டுத் தொழிலுக்கு எதிர்காலம் இல்லை என்று கருதி ஆயிரக்கணக்கானோர் வேறு காலத்துக்குச் சென்றனர். தொழில் தெரிந்தவர்கள் தங்கள் குழந்தைகளை வேறு பாதையில் பயணிக்க வைத்தனர்.

இதற்கெல்லாம் மேலாக தொழில் நுட்பம் தெரிந்த பெரியவர்கள் தங்கள் மீது படும் வெளிச்சத்தை இழக்க விரும்பாமல், விஷய ஞானத்தை கடைசி வரை மறைத்தே வைத்தனர். அடுத்தவர்களுக்கு கற்றுத் தராததால் பல அரிய விஷயங்கள் அவர்களுடனே மறைந்து போய் விட்டன.

தமிழகத்துக்கே பெருமை சேர்த்த இத்தொழிலின் நிலை உணர்ந்து பூட்டு தயாரிப்பதற்கான பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும். ஐடிஐ போன்றவற்றில் பூட்டு வடிவமைப்பு குறித்து டிரேடு தொடங்க வேண்டும். மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, கடன் உதவி வழங்கி இத்தொழிலில் அதிகளவில் ஈடுபடச் செய்ய வேண்டும். தொழில்நுட்பம் மறையாமல் பாதுகாக்க வேண்டும் என்கிறார் ஏ.என்.எஸ். பூட்டு நிறுவன வியாபாரி சுகுமாரன்.

பாரம்பரிய தொழிலாளர்கள் துரைசாமி, பிச்சை ஆகியோர் வருமான குறைவு என்பதால் பலரும் கட்டிடம், மில் வேலைக்குச் சென்று விட்டனர். வேறு தொழில் தெரியாததால் இதைச் செய்து கொண்டிருக்கிறோம். எங்கள் காலத்திற்குப் பிறகு எங்கள் குடும்பத்தில் இத்தொழிலில் ஈடுபடுவதற்கு யாரும் தயாராக இல்லை என்கின்றனர்.

திண்டுக்கல் பூட்டுத்தொழில் நசிவைத் தடுக்க அரசு இங்கு பூட்டுத் தொழிலாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கம் (லாக் சொசைட்டி) என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் போட்டுத் தொழிலுக்கு என்று ஒரு கூட்டுறவு சங்கம் இருப்பது இங்கு மட்டுமே. இங்குதான் அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும் போட்டு கொள்முதல் செய்ய வேண்டும் என்று உத்தரவு உள்ளது. எனினும் இந்த நடைமுறை காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. முன்பு 20 வகை பூட்டுகள் செய்து வந்தோம். தற்போது எவ்வகை பூட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அரசு அலுவலகங்கள் சில தொடர்ந்து இங்கு கொள்முதல் செய்கின்றன என்கிறார் தனி அதிகாரி ராஜேந்திரன்.எஜமானர்களுக்கு விசுவாசமே இருந்து கடைசி வரை வாயைத் திறக்காமல் சொத்தைக் கப்படறிய திண்டுக்கல் பூட்டுகள் ஏராளம். ஆர்ப்பாட்டம் இன்று கடமையை நிறைவேற்றி, மூதாதையரது நினைவாக பலரது குடும்பங்களில் இன்னமும் நினைவுச் சின்னமா உழைத்துக் கொண்டிருக்கும் திண்டுக்கல் பூட்டுக்கு என்றும் இல்லை அழிவு. கனமான பின்னணி சாகாவரம் பெற்ற இந்தப் பூட்டு பீனிக்ஸ் பறவை போல மீண்டும் சிலிர்த்தெழும் உலகெங்கும் தன் சிறகை விரித்து ஆட்சி செய்யும் நாள் வெகுதூரமில்லை என்பதே திண்டுக்கலின் நம்பிக்கை !