திண்டுக்கல் சாரதியை உங்களுக்கு தெரியும். சாரதிக்கு முன்பே திண்டுக்கல்லுக்கு புகழ் தேடித்தந்தது பூட்டு. திண்டுக்கல் அந்தக்காலத்திலேயே தண்ணீர் பஞ்சத்துக்குப் பிரபலம். செக்குக்கு மாட்டைக் கொடுத்தாலும் கொடுக்கலாம், ஆனால் திண்டுக்கல்காரனுக்கு பொண்ணு கொடுக்கக் கூடாது என்று அந்தக் காலத்தில் கூறியவர்கள் உண்டு. விவசாயம் இல்லாததால் மாற்றுத் தொழிலாக உருவெடுத்தது தான் பூட்டு. நேரம் காலம் பார்க்காமல் உழைக்க துடித்த இந்த ஊர் மக்களுடன் இத்தொழில் இரண்டறக் கலந்து விட்டது. சாதாரணமான பூட்டில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது திண்டுக்கல்தான். திருப்பதி உள்ளிட்ட முக்கிய கோயில்கள் மட்டுமல்ல....மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து என்று பல நாடுகளுக்கும் திண்டுக்கல் பூட்டு ஆர்டரின் பேரில் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கைக்கு கள்ளத் தோணியில் கடத்தப்பட்டதும் உண்டு. உள்பாகங்கள் துத்த நாகத்தில் அமைக்கப்பட்டதால் உப்புக்காற்று மாறுபாடான பருவநிலை போன்றவற்றையும் எதிர் கொண்டு காலம் கடந்து நின்றது. திருடர்களைத் தாக்கும் பூட்டு, திருட முயல்பவர்களை குழப்பும் பூட்டு மணி இருந்து வியாபாரிகளின் வருகை, பூட்டப்பட்டறைகளில் இரவும், பகலும் ஃபைலிங் செய்யப்படும். ஓசை, தினமும் ஆயிரக்கணக்கில் வண்டிகளில் வெளியூர்களுக்கு பயணமாகும் பூட்டுகள்..... திண்டுக்கல் எப்போதும் பரபரப்பில் மூழ்கியிருந்தது
Read More...